ஆம்பூரில் பள்ளிவாசலில் தங்கியுள்ள வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சுகாதார துறை சார்பில் மருத்துவ பரிசோதனை
ஆம்பூரில் பள்ளிவாசலில் தங்கியுள்ள வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சுகாதார துறை சார்பில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பள்ளிவாசல்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலத்தை வந்து தங்கி உள்ளவர்களுக்கு இன்றும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது இதில் இந்தோனேஷியாவை சேர்ந்த 12 பேரும் மியான்மர் நாட்டை சேர்ந்த 8 பேரும் மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 15 பேரும் தங்கி இருப்பதாக காவல் துறைக்கு மற்றும் சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து மாதனூர் சுகாதார நிலைய அலுவலர் ராமு தலைமையிலான மருத்துவ குழுவினர் பள்ளிவாசலுக்கு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனர் இதில் ஆம்பூர் மாங்காய் தோப்பு பள்ளிவாசலில் கடந்த 4 ஆம் தேதியிலிருந்து மத பிரார்த்தனை செய்வதற்காக வந்திருந்த 15 பேரை மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தினர் கடந்த 12ஆம் தேதி  மியான்மர் நாட்டில் இருந்து வந்துள்ள 8 பேர் நதிசீலாபுரம் பள்ளிவாசல் தங்கியிருந்தனர் அவர்களுக்கும் அதேபோல் கேம் நகர் பகுதியில் உள்ள பிலால் பள்ளிவாசலில் தங்கியிருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த 15 பேருக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர் இதில் ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவள்ளி ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் நகராட்சி ஆணையாளர் சௌந்தர்ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

" alt="" aria-hidden="true" />